நவராத்திரி விழாவையொட்டி ஆலந்துறையார் கோயிலில் கொலு அமைக்கும் பணி தீவிரம்

அரியலூர், அக். 10: நவராத்திரி விழா இன்று துவங்குவதையொட்டி அரியலூர் அலந்துறையார் கோயிலில் கொலு அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது. நவராத்திரி பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகா பரமேஷ்வரி கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில், விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் மற்றும் பக்தர்களின் வீடுகளில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று துவங்கும் நவராத்திரி விழாவில் தினம்தோறும் அம்மனின் பாசுரங்களை பாடி பெண்கள் வழிபாடு நடத்தவர்.

கொலுவில் 9 படிகளிலும் வைக்கப்படும் பொம்மைள் அனைத்தும், மனிதன் தன்னை படிப்படியாக உயர்த்தி கொண்டு இறைவனில் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பூஜைகளால் ஞானம், ஆயுள் விருத்தி, செல்வம் உள்ளிட்ட ஏற்றத்தை தெய்வங்கள் வழங்குவதாக நம்பிக்கையாகும்.

Related Stories: