எம்.ஆர்.கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கபடி போட்டி

ஜெயங்கொண்டம்,அக்.10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். இயக்குநர் ராஜமாணிக்கம், ஆலோசகர் தங்கபிச்சையப்பா, இணைச்செயலர் கமல்பாபு, முதல்வர் சேகர், துணை முதல்வர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்கள் கபடி போட்டி பிரிவில் முதல் பரிசாக மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.4ஆயிரமும், மூன்றாம் பரிசாக த.பழுர் அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.3ஆயிரமும், நான்காம் பரிசாக பூவாணிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.2ஆயிரமும் பெற்றனர்.

 பெண்கள் கபடி பிரிவில் முதல் பரிசாக இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.3ஆயிரமும், இரண்டாம் பரிசாக நாமக்கல் கொங்கு மேல்நிலைப்பள்ளி ரூ.2ஆயிரமும், மூன்றாம் பரிசாக முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ரூ.1500மும், நான்காம் பரிசாக இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப்பள்ளி ரூபாய் ஆயிரமும் பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கபாடி அணிகளுக்கு கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் பரிசுத்தொகையும், மெடலும் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் தலைமையில் பேராசிரியர்கள் திருமுருகன், பாப்புராஜ், ஜெயபால், ராஜசுதாகர், இளவரசன், சசிக்குமார், பாலமுருகன், சங்கர், அமர்நாத், பிரேம்குமார், சரளா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: