ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் நிலம் கொடுத்த விவசாயிகள் கோரிக்கை

அரியலூர்,அக்,10: ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என்று நிலம் கொடுத்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். அரியலூர் கலெக்டர் அலுவகத்தில் ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுடன் கலெக்டர் விஜயலெட்சுமி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடங்குவதற்காக ஜெங்கொண்டம் சுற்றுப்புர பகுதிகளில் அமைந்து கிராமத்தில் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. அப்போது சுமார் ஒரு ஏக்கர் ரூ.22 ஆயிரத்திற்கு வாங்கப்பட்டதாக கூறப்பபடுகிறது. அதனால் நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் பத்தாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து ஜெயங்கொண்டத்தில் சிறப்பு நீதிமன்றங்கள்

அமைக்கப்பட்டன. இந்நீதிமன்றத்தில் நிலம் கொடுத்த அனைவருக்கும் ஒவ்வொரு ஏக்கருக்கு ரூ.5 லட்சத்தி 40 ஆயிரம் மட்டும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனையடுத்து கலெக்டர் தலைமையில் நிலம் கொடுத்தவர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிலம் கொடுத்தவர்களிடம் உங்கள் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 லட்சத்தி 40 ஆயிரம் மட்டும் தருவதாக கூறினார்.

இதனையடுத்து விவசாயிகள் தங்களுக்கு ரூ.5லட்சத்தி 40 அயிரம் பத்தாது என்றும் எங்களுக்கு ரூ.15 லட்சம் வேண்டும் என்றும் எங்கள் குடும்பத்தினருக்கு வேலை வேண்டும் என்றும், நிலத்தில் உள்ள முந்திரி மரம் ஒன்றிக்கு ரூ.10 ஆயிரம் வேண்டும் என்றும், வீடுகளுக்கு புதிய வீடு கட்டிதர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கலெக்டர் தங்களுடைய கோரிக்கைகள் என்ன என்றும், தங்களுடைய நிலத்திற்கு  எவ்வளவு விலை வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தனிதனித்யாக  மனுவாக கொடுங்கள் நாங்கள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கிறோம் என்று கூறினார். இதனையடுத்து  ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு விலையை நிர்ணயித்து, தங்களுக்க என்ன வேண்டும் என்று  மனுவை எழுதி மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியிடம் கொடுத்தனர். இக்கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றியம் மேலூர் பஞ்சாயத்து மக்கள் 100க்கும் மேற்ப்பட்டோர்

கலந்து கொண்டனர்.

Related Stories: