அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

ஜெயங்கொண்டம்,அக்.10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ஒருங்கினைந்த கல்வி திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான மருத்துவ முகாம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராஜா தலைமை வகித்தார். முகாமில் உடல் இயக்க குறைபாடு மருத்துவர் ராஜா, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மணிகன்டன், மனநலமருத்துவர் அன்பழகி, கண் பரிசோதகர் கலைமதி ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் மாணவர்களை பரிசோதித்தனர். முகாமில் 210 மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

அதில் 25 பேர்களுக்கு கண் கண்ணாடி, 10 பேருக்கு உதவி தொகை பெருவதற்கான விண்ணப்பம் மற்றும் 35 பேருக்கு உதவி உபகரணம் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் ராமன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சங்கர், வட்டாரகல்வி அலுவலர் நீலமேகம், பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில் மற்றும் சிறப்பாசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: