தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் 2 கோடியில் கட்டப்பட்ட அரசு பள்ளி பயன்பாட்டிற்கு வந்தது

தண்டராம்பட்டு, அக்.10: தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் ₹2 கோடியில் கட்டப்பட்ட அரசு பள்ளி தினகரன் செய்தி எதிரொலியால் பயன்பாட்டிற்கு வந்தது. தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் கட்டிடங்களை பழுதடைந்து காணப்பட்டதால் 2015-16ம் நிதியாண்டில் ₹2 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் வகுப்பறைகள், ஆய்வகம், அலுவலகம், கணினி அறை, நூலகம், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. இருப்பினும், கட்டிடப் பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.

இந்நிலையில் ‘₹2 கோடி மதிப்பில் கட்டிட பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு பள்ளி’ என்று கடந்த 1ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வௌியானது. அதன் எதிரொலியாக மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவுபடி நேற்று புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வரப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: