இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஊட்டியில் கன மழை படகு சவாரி நிறுத்தம்

ஊட்டி,அக்.5:  ஊட்டியில் நேற்று காலை கன மழை ெபய்ததால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு  கருதி ஊட்டி ஏரியில் 2 மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது.   நீலகிரி  மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் கன மழை பெய்தது.  சில நாட்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் கட்நத ஒரு வார காலமாக நீலகிரி  மாவட்டத்தில் மழை ெபய்யத் துவங்கியுள்ளது. குறிப்பாக, ஊட்டி, குந்தா,  குன்னூர் போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.     இந்நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக மூன்று நாட்கள் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்தது. அதற்கு ஏற்றார் போல், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை கன மழை பெய்தது .   இதனால்  தாழ்வான  பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. கன மழையின் காரணமாக சுறு்றுலா  பயணிகள் நலன் கருதி ஊட்டி ஏரியில் மிதி படகுகள் சவாரி நிறுத்தப்பட்டது. மழை  ஓய்ந்த பின்னரே மீண்டும் படகு சவாரி துவக்கப்பட்டது. தொடர்ந்து மேக  மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. ெதாடர்ந்து, மேக மூட்டம்  மற்றும் சாரல் மழை ெபய்து வரும் நிைலயில், மாவட்ட நிர்வாகம் சார்பில்  அனைத்து துறைகளும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை  காரணமாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் நேற்று குறைந்தே காணப்பட்டது.

Related Stories: