தேசிய பேரிடர் மீட்பு படையினர் 200 பேர் கேரளா விரைவு ரெட் அலர்ட் எதிரொலி

அரக்கோணம், அக்.5: ரெட் அலர்ட் எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 200 பேர் 5 குழுக்களாக கேரளாவுக்கு விரைந்து சென்றனர். ரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பேய் மழையால் கடும் அழிவு ஏற்பட்டது. வெள்ள பாதிப்புகளில் இருந்து கேரளா மெல்லமெல்ல மீண்டு வரும் நிலையில் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பாதுகாப்பு பணிகளுக்கு உதவும்படி மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்தார். இதையேற்று உடனடியாக வேலூர் மாவட்டம், தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செல்லும்படி மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்தது. அதன்படி உடனடியாக 200 பேர் கொண்ட 5 குழுவினர், பாதுகாப்பு கவசங்களுடன் நேற்று கேரளா விரைந்து சென்றனர்.

Related Stories: