பச்சிளம் பெண் குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைப்பு குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட

திருவண்ணாமலை, அக்.5: திருவண்ணாமலையில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை, தத்து நிறுவனத்திடம் கலெக்டர் ஒப்படைத்தார்.திருவண்ணாமலை கொசமடத்தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில், கடந்த 23ம் தேதி பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் பெண் சிசு மீட்கப்பட்டது. சிசுவின் உடலின் மீதிருந்த ரத்த கழிவுகளைகூட முழுமையாக சுத்தப்படுத்தாமல், குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதால் குழந்தையின் உடல்நிலை மிகவும் ேமாசமடைந்திருந்நது. உடனடியாக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களாக அளிக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் சிகிச்சையால், குழந்தை நலமடைந்தது. தொடர்ந்து, சேலத்தில் இயங்கும் லைப் லைன் டிரஸ்ட் தத்து நிறுவனத்திடம் பச்சிளம் பெண் குழந்தையை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஒப்படைத்தார்.மேலும், பெற்றோரை இழந்து தவித்தபோதும் தன்னுடைய தம்பி, தங்கையை காப்பாற்ற கலெக்டரிடம் மனு அளித்து பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட ஆரணி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஆனந்தியின் நினைவாக, பச்சிளம் பெண் குழந்தைக்கு ஆனந்தி என பெயர் சூட்டினார்.அப்போது, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா டர்த்தி, தத்து நிறுவன இயக்குநர்(பொறுப்பு).ஷர்மிளா, முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: