புற்களை மேய்ந்த 4 பசுக்களை கொடுவாளால் வெட்டியவர் கைது 2 பேருக்கு வலை திருவண்ணாமலை அருகே கொடூர சம்பவம்

திருவண்ணாமலை, அக்.5: திருவண்ணாமலை அருகே தரிசு நிலத்தில் புற்களை மேய்ந்த 4 பசுக்களை கொடுவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார். மேலும், 2 பேரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை பல்லவன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர், கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான 4 பசுக்கள் வழக்கம்போல, பல்லவன் நகர் அருகே உள்ள நொச்சிமலை ஏரிக்கரையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்றன.அப்போது, பல்லவன் நகரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் வேணுகோபால்(57) என்பவருக்கு, சொந்தமான தரிசு நிலத்தில் பசுக்கள் புற்களை மேய்ந்து கொண்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால், அவரது மனைவி சிவசங்கரி, மகன் காமேஷ் ஆகியோர், பசுக்கள் மீது கற்களை வீசி விரட்டினர்.

இதைப்பார்த்த சுரேஷ் வாயில்லா ஜீவன்கள் மீது கற்களை வீசலாமா? என தட்டிக்கேட்டார். இருப்பினும், ஆத்திரத்தில் இருந்த வேணுகேபால் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, பசுக்களை கொடுவாளால் சரமாரியாக வெட்டினார்களாம்.

தில், ஒரு பசுவின் நெற்றியில் கொடுவாள் வெட்டு ஆழமாக பதிந்தில் நிலைகுலைந்தது. இதைப்பார்த்து சுரேஷ், கண்ணீருடன் கூச்சலிட்டதால், அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து பசுக்களை மீட்டனர். இருப்பினும், பசுவின் நெற்றியில் பதிந்த கொடுவாளை எடுக்க முடியவில்ைல. படுகாயம் அடைந்த பசுக்களை, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.இதுகுறித்து சுரேஷ், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், வேணுகோபால், சிவசங்கரி, காமேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, வேணுகோபாலை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடிவருகின்றனர்.

நிலத்தில் மேய்ந்த பசுக்கள் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: