குதிகால் வெடிப்பை தடுக்க!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக  உடலை தாங்கி பிடிக்கும்  கால்களை  அழகாக  வைத்திருப்பது அவசியமானதாகும். இது ஆரோக்கியம்  சார்ந்த விஷயமும் கூட.. இன்றைக்கு பலரும் குதிகால்  வெடிப்பு  பிரச்னையை சந்திப்பது  சகஜமாகிவிட்டது.  குதிகால்  வெடிப்பு வரும்போது ஆரம்பத்திலேயே  அதை சரி செய்ய  வேண்டும்.  இல்லையெனில்  அவை அதிகமாகி  கால்களை  அசிங்கமாக்கிவிடும். அந்த வகையில்  குதிகால்  வெடிப்பை  சரி செய்ய  என்ன மாதிரியான  இயற்கை  வழிகளை  பின்பற்றலாம்  என்பதை  பார்ப்போம்:

நன்கு  கனிந்த வாழைப்பழத்தை எடுத்து கையால் பிசைந்து, அதை பாதங்களில்  தடவி  20 நிமிடம்  ஊற வைத்து,  பின்  குளிர்ந்த  நீரால்  கழுவ வேண்டும்.  இப்படி வாரத்திற்கு  2  முறை,  இரவு தூங்கும் முன் செய்தால், நல்ல பலன்  கிடைக்கும்.

ஒரு  வாளியில்  பாதங்கள் முழ்கும் அளவு  வெதுவெதுப்பான  நீரை எடுத்து, அதனுடன்  ஒரு கப் தேன்  கலந்து பின்பு  பாதங்களை  சுத்தமாக  கழுவிவிட்டு,  தேன் கலந்த நீரில்  பாதங்களை  20 நிமிடம்  ஊற  வைத்து  எடுக்க வேண்டும்.  பிறகு  பாதங்களை  நன்கு  உலர்த்திவிட்டு,  பாதங்களுக்கு  மாய்ஸ்சுரைசரை  தடவி  வரலாம். இரவு   தூங்கும் முன் சுத்தம்   செய்த பாதங்களில்  வெஜிடபிள்  ஆயிலை  தடவி,  கால்களில்  சாக்ஸை  அணிந்து,  இரவு  முழுவதும்  ஊற வைக்க வேண்டும். இப்படி  தினமும்  செய்து வந்தால்,  குதிகால்  வெடிப்பு  மறைந்துவிடும்.

வெதுவெதுப்பான  நீரில் ஒரு  தேக்கரண்டி  வாஸலினுடன்  4-5  துளிகள்  எலுமிச்சை  சாற்றினை  கலந்து  பாதங்களை  15 நிமிடம்  ஊற வைத்து,  பின்  நன்கு  உலர்த்தி  பின்னர்  அந்த வாஸலின்  கலவையை  பாதங்களில்  தடவி,  சாக்ஸை  அணிந்து, இரவு  முழுவதும்  ஊற வைக்க வேண்டும்.  இப்படி  தொடர்ந்து  செய்ய,  குதிகால்  வெடிப்பு  விரைவில்  

காணாமல்  போகும்.

ஒரு  கிண்ணத்தில்  2  மேசைக் கரண்டி  அரிசி மாவுடன்,  1  தேக்கரண்டி  தேன்  மற்றும்  5-6  துளிகள்  வினிகரை  சேர்த்து  கலந்து   பேஸ்ட்  செய்து  தனியாக  வைத்துபின்,   பாதங்களை  வெதுவெதுப்பான  நீரில்  10 நிமிடம்  ஊற வைத்து,  பின்  பாதங்களில்  அந்த பேஸ்ட்டை  தடவி,  சிறிது  நேரம்  ஊற வைத்து, கழுவ  வேண்டும். இப்படி  வாரத்திற்கு  2-3  முறை  செய்தால்  குதிகால்  வெடிப்பு  நீங்கிவிடும்.

தொகுப்பு : கவிதா

Related Stories: