சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி

திருச்செங்கோடு,  செப். 21: திருச்செங்கோடு அருகே கொல்லப்பட்டியில் சாலையில் வழிந்தோடும்  சாக்கடை கழிவுநீரால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருச்செங்கோடு  நகர பாரதிய ஜனதா நகர தலைவர் ரஜினிகாந்த் மற்றும் கொல்லப்பட்டி ஊர்  பொதுமக்கள், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரியிடம் வழங்கிய மனுவில்  கூறியுள்ளதாவது: திருச்செங்கோடு அருகே உள்ள கொல்லப்பட்டி, வாலரைகேட்  பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள வீடுகளுக்கு முறையான சாக்கடை வசதி ஏதும் இல்லை. இதனால் வீடுகள்,  ஓட்டல்கள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர்  சாலையில் தேங்கி விடுகிறது. மேலும், சாலையோரம் தாழ்வாக உள்ள வீடுகள்  மற்றும் விவசாய நிலங்களில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. ஆண்டு கணக்கில்  தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவ  காரமாகிறது. மேலும், கழிவுநீரால் விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும்  மாசடைந்து வருகிறது. கழிவுநீர் வீடுகளுக்குள் செல்வதை தடுக்க தோண்டிய  குழியால் குடிநீர் குழாய் உடைந்து, கழிவுநீர் கலந்து குடிநீர் துர்நாற்றம்  வீசுகிறது. எனவே, கொல்லப்பட்டி, வாலரைகேட் பகுதியில் சாக்கடை அமைத்து,  உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை  விடுத்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர், உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

Related Stories: