நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் “பச்சை நிற தினம்” கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, செப்.21: கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் “பச்சை நிற தினம்” கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் தண்ணீர் கண்காணிப்பு தினத்தையொட்டி “பச்சை நிற தினம்” கொண்டாடப்பட்டது. மரம் வளர்த்தல் மற்றும் மரங்களை காப்போம் என்பதை வழியுறுத்தும் வகையில் மாணவர்கள் மரங்களின் பயன்கள் குறித்தும், மழை நீரின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். பாலர் வகுப்பு குழந்தைகள் பள்ளியின் காலை வழிப்பாட்டு கூட்டத்தில் பச்சை நிற உடை அணிந்து, பாடல்கள் பாடியும், பச்சை நிறத்திலான காய்கறிகள், பழங்கள் பெயர்களை கூறியும், அவற்றின் பயன்களையும் விளக்கினர். மேலும், பச்சை நிறத்தில் வரைபடங்கள் வரைந்து, ஆங்காங்கே ஒட்டி வைத்தனர். இத்தினத்தையொட்டி மரம் இல்லையேல், மழை இல்லை என்பதை நினைவுப்படுத்தும் வகையில் சிறிய வனம் போன்று அமைத்து, காடுகள் மற்றும் விலங்குகளில் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினர். மேலும் தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்துவது குறித்தும், மழை நீரை சேகரிப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியினையொட்டி மரக்கன்றுகள் நடும் விழாவினை பள்ளியின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளியின் தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிறுவனர்கள் வழக்கறிஞர் கவுதமன், டாக்டர். புவியரசன் மற்றும் பள்ளியின் முதல்வர் உமா ஜோதீஸ்வரன் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

Related Stories: