குறைவான ஊதியம் கண்டித்து பெல் சூப்பர்வைசர்கள் கருப்புக்கொடியுடன் பேரணி

திருச்சி,செப்.21: குறைந்த சம்பளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல் சூப்பர்வைசர் கள் கருப்புக்கொடி பேரணி நேற்று நடத்தினர்.

திருவெறும்பூர் பெல் நிறுவனத்தின் சூபர்வைசர் சங்கத்தினர் சார்பில் 500 பேர் பொதுச் செயலாளர் முகமதுசலீம் தலைமையில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி பெல் வளாகத்தில் உள்ள 79வது கட்டிடம் அருகே தொடங்கி மெயின் கேட் வரை கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக சென்று பின்னர் பெல் மனிதவளத்துறை உதவி பொது மேலாளர் சமதிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், பெல் நிறுவனத்தில் சூபர்வைசர்களாக உள்ளவர்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியர் என படிப்பிற்கு தகுந்தபடி 1992ம் ஆண்டிற்கு முன்பு ஊதியம் வழங்கப்பட்டது. 1992ம் ஆண்டிற்கு பிறகு அது 50 சதவீதமாக குறைக்கப்பட்டதோடு கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட குறைவான ஊதியத்தை வழங்குவதை கண்டிக்கிறோம்.அதிகாரிகளுக்கு மத்திய அரசும், தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தை மூலமும் ஊதியம் பெறுகின்றனர். ஆனால் சூபர்வைசர்களுக்கு நிர்வாகம் தான் ஊதிய த்தைமுடிவு செய்ய வேண்டும். இதை கடந்த 20 ஆண்டுகளாக பெல் மனிதவளத் துறை செய்ய மறுக்கிறது.சூபர்வைசர்களுக்கு குறைந்தபட்சம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பெல் நிர்வாகம் புதிய ஊதிய ஆணையை திரும்ப பெறவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சூபர்வைசர்கள் கூறுகையில்,இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (இன்று) பெல் மெயின் கேட் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும். 29ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டமும், அதற்கு பிறகும் பெல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படவில்லை என்றால் போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்றனர்.

Related Stories: