பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டவிழிப்புணர்வு முகாம்

தா.பேட்டை,செப்.21:  முசிறி அடுத்துள்ள புலிவலம் கிராமத்தில் மக்காச்சோள சாகுபடி மற்றும் பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர்கள் கணேசன், பூபதி முன்னிலை வகித்தனர். அப்போது முசிறி வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் பருவமழை காலதாமதமாக பெய்வதால் நிலக்கடலை மற்றும் துவரை சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே விவசாயிகள் மாற்றுப்பயிராக 95 - 110 நாட்கள் வயதுடைய குறைந்த மழைநீரைக் கொண்டு அதிக மகசூல் தரும் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்து பயனபெறலாம். இதில் இரண்டு மடங்கு மகசூல், மூன்று மடங்கு வருமானம் பெற வாய்ப்புள்ளது.

 மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: