பல ஆண்டாக சீரமைக்கப்படாததால் குளமாக மாறிய ரயில் நிலைய சாலை

ஆவடி, செப். 21: ஆவடி அடுத்த அண்ணனூரில் ரயில் நிலையம், ரயில்வே பணிமனை மற்றும் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இப்பகுதி மக்கள் பணி நிமிர்த்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அண்ணனூர் ரயில் நிலைய சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை வழியாக தான் அங்குள்ள ரயில்வே பணிமனை, தனியார் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளுக்கு  சென்று வரு

கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை பல ஆண்டாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக கிடக்கிறது. தற்போது, அடிக்கடி மழை பெய்வதால், சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘போக்குவரத்து மிகுந்த இச்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் சாலை பள்ளங்களில் விழுந்து செல்கின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிகளுக்கு நடந்து செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிப்படுகின்றனர்.  தற்போது, அடிக்கடி மழை பெய்து வருவதால் சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால், சாலை சேறும் சகதியுமாக மாறி இருப்பதால் பாதசாரிகள் நடமாட முடியவில்லை. வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது. இச்சாலையை சீரமைக்க கோரி பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, இனி மேலாவது, அண்ணனூர் ரயில் நிலைய சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: