விவசாய கூட்டமைப்பு பிரசார பயணம்

காளையார்கோவில், செப்.21 : காளையார்கோவில் பஸ்நிலையம் அருகில் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் மாநாடு என்ற தலைப்பில் பிரசார வாகனத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று  பிரசாரம் செய்து வருகின்றானர். அவ்வாறு காளையார்கோவில் பகுதிக்கு வந்த பிரசார வாகனத்தை காளையார்கோவில் அமமுக தெற்கு ஒன்றியச் செயலளார்  மூர்த்தி தலைமை வகித்த அழைத்தார். தலைவர் தமிழ் மொழிக் காவலர் புதுக்கோட்டை மிசா. மாரிமுத்து, முன்னாள் சிவகங்கை நகராட்சி தலைவர் அர்ச்சுணன் போசுகையில், ‘காவிரியில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 300 டிஎமசி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது இன்னும் சென்று கொண்டு இருக்கின்றது.

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டகளில் குடிக்க தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

மணல் கொள்ளை பராமரிப்பு இல்லாதது காரணமாக  முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்டது. காவிரியில் வெள்ளம் ஏற்படும்போது வீணாகும் தண்ணீரை வறட்சியாக உள்ள திருச்சி, கரூர் மாவட்டங்களின் ஒரு பகுதிக்கும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்படுத்தும் திட்டம் 1958ல் உருவானது. காவிரியில் மாயனூர் கதவணையில் இருந்து 20 மீட்டர் அகலத்திற்கு 258 கி.மீ. தூரம் கால்வாய்  வெட்டி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வழியாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மருகில் புதுப்பட்டி, கிராமத்தில்  குண்டாற்றுடன் இணைக்கப்படுகின்றது. அதில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் வைப்பாறுடன் இணைக்கப்படுகின்றது. இந்தக் கால்வாய் மூலம் 6000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து 10 டிஎம்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரப்பயணம் நடைபெற்றது.

Related Stories: