ஒட்டன்சத்திரத்தில் அடக்க ஸ்தல சுவர் பணி துவக்கம்

ஒட்டன்சத்திரம், செப். 21: ஒட்டன்சத்திரத்தில் செக்போஸ்ட் பகுதியில் உள்ள முஸ்லீம்களின் அடக்க ஸ்தலமான (கபர்ஸ்தான்) சுற்றுச்சுவர் நீண்ட காலமாக இடிந்த நிலையில் இருந்தது. இதனை கட்டித்தரும்படி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏவிடம் முஸ்லீம் ஜமாத்தார்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற எம்எல்ஏ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இதன்பேரில் நடந்த கட்டுமான பணி தொடக்க விழாவில் அர.சக்கரபாணி எம்எல்ஏ கலந்து கொண்டு, துவக்கி வைத்தார். இதில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் பாண்டியராஜன், அரசு ஒப்பந்ததாரர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் ஒருங்கிணைந்த ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: