வங்க கடலில் புயல் கரைகடந்தது குமரியில் சாரல் மழை மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில், செப்.21: கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாகி நேற்று நள்ளிரவில் கடலோர ஆந்திராவில் கலிங்கப்பட்டினம்- ஒடிசா கோபால்பூர் இடையே கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதலே குமரி மாவட்ட பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் முதல் நாகர்கோவில் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மேலும் இன்று (21ம் தேதி) ஆந்திரா மத்திய வங்க கடல் பகுதிகள், வடக்கு வங்க கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 30 அடியாக இருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 67 அடியாகவும், சிற்றார்-1ல் 13.84 அடியும், சிற்றார்-2ல் 13.94 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 28.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 52.90 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது.

Related Stories: