துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவை ெதாகை வழங்க கோரி நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் அக்.10ல் குடும்பத்துடன் முற்றுகை சிஐடியு பேரவை முடிவு சிஐடியு பேரவை முடிவு

நீடாமம்கலம்,செப்.19: துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க கோரி நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை அக்டோபர் 10ல் முற்றுகை போராட்டம் நடத்த சிஐடியு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீடாமங்கலம் ஒன்றிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை சிஐடியு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் வடுவூரில் செல்வம் தலைமையில் நடந்தது.செல்லையன் முன்னிலை வகித்தார்.மாநில சம்மேளன தலைவர் பாலசுப்ரமணியன்,மாவட்டச் செயலாளர் முனியாண்டி,அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் தமிழ்மணி,ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன்,கோவிந்தராஜ்,தனபால்,கருணாநிதி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

7வது ஊதியகுழு அறிவிப்பின் படி கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இயக்குனர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.2013ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் மூன்றாண்டு பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 10ம் தேதி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.

Related Stories: