கூத்தாநல்லூர் அருகே இந்திய கம்யூ. பிரசார குழுவிற்கு வரவேற்பு

நீடாமங்கலம்,செப்.19: வரும் 23ம் தேதி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியூ சார்பில் நடைபெற உள்ளகண்டன மாநாட்டில் கலந்து கொளள  கடந்த 17ம் தேதியிலிருந்து தமிழகத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்நிய நாட்டை காப்போம்,இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்ற தலைப்பில் பிரசார இயக்கங்கள் நடை பெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த 17ம் தேதி வேதாரண்யத்திலிருந்து பிரசார குழு தொடங்கி நேற்று கூத்தாநல்லூர் அருகில் உள்ள வேல்குடிக்கு முன்னாள் எம்எல்ஏபழனிச்சாமி தலைமையில் முன்னாள் எம்.பி எம்.செல்வராஜ்,இந்நிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம்,மாநில குழு செல்வராஜ், ஏஐடியூசி மாநில துணைச்செயலாளர் சந்திரகுமார்,முன்னாள்எம்எல்ஏ உலகநாதன், விவசாய சங்க மாவட்ட தலைவர் மாசிலாமணி,மாவட்ட மாணவரணி துரைஅருள்ராஜன், இளைஞர் பெருமன்ற மாநில துணைச்செயலாளர் முருகேசு உள்ளிட்ட குழுவினரை கூத்தாநல்லூர் நகர இந்நிய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சுதர்சன் வரவேற்றார்.மாவட்டகுழு தவபாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிறகு லட்சுமாங்குடி பாலம், அத்திக்கடை, கொரடாச்சேரி கடைவீதி வழியாக நீடாமங்கலம் வந்த குழுவிற்கு ஒன்றிய செயலாளர் நடேசதமிழர்வன்,மாவட்டக்குழு ராவணன்,ராதா, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, துணைச்செயலாளர் செந்தில்குமார் தப்பாட்டத்துடன் வரவேற்று அனைத்து கிளைகளிலிருந்தும் குழு தலைவர் பழனிச்சாமிக்கு பண மாலை அணிவிக்கப்பட்டது.நீடாமங்கலம் பெரியார்சிலை அருகில் நடந்த கூட்டத்தில் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பேசினர்.

Related Stories: