தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் டி.ஆர்.பாலு பேச்சு பேச்சுவார்த்தையில் உடன்பாடு பூதலூர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் வாபஸ்

திருக்காட்டுப்பள்ளி, செப். 19:   அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பூதலூர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பூதலூர் ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்து தரக்கேட்டு நேற்று ரயில் நிலைய வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பூதலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார், செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் வீரசிங்கம், அந்தோணிசாமி, இளங்கோ மற்றும் ரயிவேதுறை பூதலூர் நிலைய சிறப்பு கண்காணிப்பாளர் (பொ) துபான்மர்தானியா, ஸ்டேஷன் மாஸ்டர் அவினாஷ்குமார் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் பயணிகள் கழிவறைகளை சீர்படுத்துவது, குடிநீர் வசதிகளை செய்து தருவது, ரயில் நிலையம் உள்ளே மற்றும் வெளியே மின்விளக்குகளை எரிய செய்வது ஆகிய பணிகள் உடனடியாக செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் ரயிவே மேல்அதிகாரிகளிடம் தெரிவித்து ஒவ்வொன்றாக செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: