நாய் தொல்லை தாங்க முடியல சில மாதத்தில் பலருக்கு ‘கடி’

காளையார்கோவில், செப். 19: காளையார்கோவிலில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காளையார்கோவிலில் சுமார் 22 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றிதிரிகின்றன. இவை காலையில் நடந்து செல்பவர்களில் துவங்கி வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் என அனைவரையும் கடித்து வருகிறது. டூவீலர்களில் செல்வோரையும் விரட்டுவதால் அவர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமுறுகின்றனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றுவதால் இதுபோல் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் நாய்கடிக்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவில் மட்டுமல்லாமல் பகலில் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். மேலும் சிலநாய்கள் வெறிபிடித்தும், உடல் முழுவதும் புண்களுடன் சுற்றுவதால் பொதுமக்களுக்கு நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் சிலகாலம் தெருக்களில் பன்றிகளின் நடமாட்டம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் பன்கள் வலம் வர துவங்கி விட்டதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடன் சிகிச்சை பெறவேண்டும்

Related Stories: