கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பழுதடைந்த மார்க்கெட் வளாக கட்டிடத்தை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், செப்.19: கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வரும் மார்க்கெட் வளாக கட்டிடத்தை புதுப்பித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரப்பகுதியின் மையப்பகுதியில் குறுகிய இடத்தில் பேருந்து நிலையமும், இதன்  பின்புறம் காய்கறி மார்க்கெட் வளாகமும் செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மார்க்கெட் வளாகம் இங்கு செயல்பட்டு வருகிறது. எந்த நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் செயல்பட்டு வரும் இந்த மார்க்கெட் வளாக கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது என புகார் கூறப்படுகிறது.  ஆங்காங்கே பஸ் ஸ்டாண்ட் வளாக கட்டிடங்கள் மோசமான நிலையில் இருந்து வரும் பட்சத்தில், மார்க்கெட் வளாக கட்டிடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து உள்ளனர். எனவே, அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி மார்க்கெட் வளாக கட்டிடங்களை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: