கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம்

சாயல்குடி, செப். 19:  தேசிய ஊட்டச்சத்து தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்கள் சார்பில், அந்தந்த கிராமங்களில் மக்கள் விழிப்புணர்வு பேரணி, கருந்தரங்கம் நடந்தது. மாணவர்கள் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

கடலாடி அரசு மேல்நிலை பள்ளியில் தொடங்கிய பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் பிரிதாபால் தலைமையிலும், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சொக்கர் முன்னிலையிலும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளியில் துவங்கிய பேரணி யூனியன் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மாணவர்கள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில், காந்தி சிலை முதல் பேருந்து நிலையம் வரை நடந்த பேரணிக்கு தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி தலைமையும், மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் முன்னிலையும் வகித்தனர். சாயல்குடி அருகே பொன்னகரம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த பேரணிக்கு தலைமையாசிரியர் கோட்டைச்சாமி, விளாத்திக்கூட்டம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் திருக்கம்மாள், எம்.கரிசல்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வீரமாளி, ஆசிரியை விமலிட்டா, கடலாடி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜோதி, இளஞ்செம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் கார்த்திகேயன்(பொ), உச்சிநத்தம் ஆறுமுக விலாஸ் இந்துமிசன் தொடக்கப் பள்ளியில் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பேரணியும், கிராமமக்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடந்தது.

Related Stories: