கொடைக்கானல் சாலையில் திரியும் மாடுகளால் வாகனங்கள் திணறல்

கொடைக்கானல், செப். 19: கொடைக்கானலில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள சாலைகளில் அதிகளவில் மாடுகள் திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து அபாயம் நிலவுகிறது. நேற்று முன்தினம் கூட கொடைக்கானல் நகராட்சி சாலையில் மாடுகள் ஆக்கிரமித்தபடி திரிந்தன. இதனால் அப்பகுதியில் அரை மணிநேரத்துக்கு மேல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொடைக்கானல் சாலைகளில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதுடன் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: