திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சி குழுவாக சேர்ந்து பயன்பெற அழைப்பு

பழநி, செப். 19: திருநங்கைகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படுவதாகவும், குழுவாக சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட சமூகநலத்துறை, போகர் தொண்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு முகாம் பழநி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. போகர் தொண்டு நிறுவன இயக்குநர் கார்த்திகாயினி வரவேற்று பேசினார். பழநி சப்கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். பழநி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் முத்துமீனாள் முன்னிலை வகித்தனர். முகாமில் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள், உதவித்தொகை, சலுகைகள், மானியம், இலவச வீட்டுமனை திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து வங்கிகள் சார்பில் தையல், சணல் பை தயாரிப்பு, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, இமிடேஷன் நகை தயாரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும், குழுவாக சேர்ந்து பயன்பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: