ஊட்டச்சத்து முகாமில் தாய்மார்களுக்கு பரிசு

புதுச்சேரி, செப். 19: புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திட்டம்-4 சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம், கண்காட்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள திருமண மகாலில் நேற்று நடந்தது. திட்ட அதிகாரி விஜயா வரவேற்றார். துறை இயக்குநர் யஷ்வந்தையா தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் ஹேமலதா, பொது சுகாதார செவிலிய அதிகாரி கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி எம்எல்ஏவும், பிப்டிக் சேர்மனுமான சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, சிறந்த தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசும், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாணவிகள், செவிலியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விஜயலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உருளையன்பேட்டை தொகுதி அங்கன்வாடி பணியாளர்கள் செய்

திருந்தனர்.’

Related Stories: