புதன்சந்தையில் மாடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், செப்.19:  வெளிமாநில வியாபாரிகள் வராததால், புதன்சந்தையில் மாடுகள் விலை சரிந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.நாமக்கல்  மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை  கூடுகிறது. மாடுகளை வாங்க, விற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள். நேற்று கூடிய  மாட்டுச்சந்தையில் எருமை, எருது, பசு, கன்றுக்குட்டிகள் என பல்வேறு  பகுதிகளில் இருந்து அதிகளவிலான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தது.கேரளா,  ஆந்திரா, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குறைந்த அளவிலான  வியாபாரிகளே வந்திருந்தனர். இதனால் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது.  கடந்தவாரம் ₹17 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு,  இந்த வாரம் ₹15  ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ₹45 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹44  ஆயிரத்திற்கும், ₹8 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுக்குட்டி ₹7  ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

Related Stories: