சொத்துவரியை சீராய்வு செய்ய ராசிபுரம் நகராட்சியில் விண்ணப்ப விநியோகம்

ராசிபுரம்,செப்.19:  தமிழக அரசின் உத்தரவின் பேரில், மாநகராட்சி, நகராட்சியில் சொத்துவரி உயர்த்தும் நோக்கில் சீராய்வு மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. அரசு அறிவித்தபடி நிலத்தை சதுரடியில் கணக்கிட்டு, கீற்றுக்கூரை, கூரை, ஓட்டுவீடு, கான்கிரீட் வீடு, கட்டிடம், மாடிகள் எண்ணிக்கை, வர்த்தக கடையா, பள்ளி, கல்லூரி, திருமண மண்டபம், மார்க்கெட், ஹோட்டல், நட்சத்திர ஹோட்டல், பல்பொருள் அங்காடி, சினிமா தியேட்டர் என எந்த வகையை சார்ந்தது என தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளர் சுய மதிப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்து நகராட்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

பின்னர் நகராட்சியில் அதற்கேற்றார் போல சொத்துவரி நிர்ணயம் செய்யப்படும். இதில் கூடுதலாக வரி அறிவிக்கப்படும் பட்சத்தில், விண்ணப்பதாரர், ஆணைத்தில் முறையிட்டு, நிவர்த்திசெய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் செத்துவரி சுய மதிப்பீட்டு படிவத்தை, நகராட்சி ஊழியர்கள் கடந்த சில நாட்களாக வீடுகள்தோறும் விநியோகித்து வருகின்றனர். ஏற்கனவே நகராட்சியின் கடைகளுக்கு 100 சதவீதம் வரை வரியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது தனியாரின் வீடு, வர்த்தக கட்டடங்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கியது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Related Stories: