மத்திய அரசை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம்,செப்.19:  நாட்டில் வேலைவாய்பினை அதிகரிக்காத மத்திய அரசை கண்டித்து,  பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கான புதிய திட்டங்களை  அமல்படுத்தாததால் நாட்டில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. பாஜ ஆட்சிக்கு வரும் முன்னர் 2 கோடி இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பினை உருவாக்குவோம் என அறிவித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த  பின்னர், அதற்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை. எனவே, புதிய வேலைவாய்ப்பு  திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில்  உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி, புதிய வேலை வாய்ப்பினை ஏற்படுத்த  வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள 50 லட்சம் காலிபணியிடங்களை  நிரப்ப வேண்டும். வேலை நியமனத்தில் நடைபெறும் ஊழல்களை தடுத்த நிறுத்த  வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு  ஒன்றிய குழு தலைவர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரவிக்குமார்,  செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: