காவேரிப்பட்டணத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி விழிப்புணர்வு மேளா

கிருஷ்ணகிரி, செப்.19: காவேரிப்பட்டணத்தில் நாளை(20ம் தேதி) திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளா மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன் விழிப்புணர்வு மற்றும் சந்தையில் நிலவும் வேலைவாய்ப்புகள் குறித்து கிராமப்புற இளைஞர்களை சென்றடையும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம் நடத்தப்படவுள்ளது.அதன்படி காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை(20ம் தேதி) காலை 10.30 மணிக்கு திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளா மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 5ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பேஸிக் கம்ப்யூட்டர், டேலி, ரீடேய்ல் ஆபரேட்டர், சிவிங் மெஷின் ஆபரேட்டர், எம்ராய்டரி மெஷின் ஆபரேட்டர், பார்மஸி அசிஸ்டெண்ட், ஜெனரல் அசிஸ்டெண்ட், ஸ்டிச்சிங் ஆபரேட்டர்(புட்வேர்), ப்ரி அசம்பிளி ஆபரேட்டர்(புட்வேர்) போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, தாங்கள் விரும்பும் திறன் பயிற்சயில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது. அத்துடன் இப்பயிற்சியின்போது, போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுதுபொருட்கள், புத்தகப்பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.  எனவே, இத்திறன் பயிற்சி விழிப்புணர்வு மேளாவில் கலந்துகொண்டு, திறன்பயிற்சிக்கு பதிவு செய்து, விரும்பும் பயிற்சியை இலவசமாக பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: