பழைய தர்மபுரியில்மண்புழு உரம் உற்பத்தி மையம் செயல்பாடின்றி கிடக்கும் அவலம்

தர்மபுரி, செப்.19: பழைய தர்மபுரியில் செயல்பாடின்றி வீணாக கிடக்கும் வரும் மண்புழு உரம் உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உத்வேகப்படுத்தும் வகையில், வேளாண் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் இயற்கை உரம் தயாரிப்பத்தற்காக மையங்கள் அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் பூ, காய்கறி விளைச்சல் அதிகம் உள்ளது. துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகளுக்கு அடிஉரமாக இயற்கை உரமே பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.பாலக்கோடு, இலக்கியம்பட்டி, பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய தர்மபுரியில் உரம் தயாரிக்க உரக்குழிகளும், மண்புழு உரம் தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் தேவையான கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சேகரிக்கப்படும் இயற்கை கழிவுகளை எடுத்து வந்து உரம் தயாரிக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ஓராண்டுக்கும் மேலாக அந்த கட்டிடம் வீணாகி கிடக்கிறது. மேலும் இதே பழைய தர்மபுரியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மண்புழு உரம் தயாரிக்கும் கட்டிடமும் மேற்கூரையின்றி குப்பை கிடங்காக மாறிவிட்டது. வீணாகி வரும் உரக்கிடங்குகளை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பழைய தர்மபுரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: