காரிமங்கலத்தில் பாஜ கொடிகம்பம் மாயம்

காரிமங்கலம், செப்.19: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகே பாஜக சார்பில் 15 அடி உயர கொடி கம்பம் நடப்பட்டிருந்தது.கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இக்கொடிகம்பம் அகற்றப்பட்டது. 10 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பாஜகவினர் கொடி கம்பத்தை வைத்தனர். நேற்று அந்த கொடி கம்பத்தை மர்ம நபர்கள் அகற்றினர். கொடி கம்பம் மாயமானதை கண்டு பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: