ராமியணஅள்ளி - அரூர் இடையே பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கடத்தூர், செப்.19: கடத்தூர் அருகே ராமியணஅள்ளி- அரூர் செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடகரை காலனி பகுதியில் ராமியனஅள்ளி - அரூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை தென்கரைகோட்டை, வடகரை, வடகரை காலனி, கொளகம்பட்டி, மாங்கநேரி, காமராஜ்நகர், புதுப்ேபட்டை, குறிச்சிஅள்ளி, ஐயப்பன்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது தோட்டத்தில் விளையும் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சாலையில், மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தாததால் வாகனஓட்டிகள் இரவு ேநரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: