எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பது சரியல்ல பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

சுசீந்திரம், செப். 19: எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சிலர் எதிர்த்து வருகிறார்கள். இது சரியல்ல என்று வெள்ளமடம் அருகே நடந்த நிகழ்ச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். வெள்ளமடம் அருகே உள்ள குலசேகரன்புதூர் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குலசேகரன்புதூர் பகுதிக்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தாமல் இருந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசின் நிதி பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது. தற்போது தமிழக உள்ளாட்சிகளுக்கான நிதி நகர்புற உள்ளாட்சிகளுக்கான நிதியாக ₹1400 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

காவல்துறையையும், நீதிமன்றத்தையும் பா.ஜ தேசிய செயலாளர் எச். ராஜா விமர்சித்தது குறித்து நான் கருத்து செல்ல விரும்ப வில்லை. அரசு புறம்போக்கு நிலத்தை அதிமுக அரசு பிச்சை போட்டதாக சிலர் பொது மேடைகளில் பேசி வருகிறார்கள். அரசு புறம்போக்கு நிலம் பொதுமக்கள் நிலம் தான். அதிமுக அரசு பிச்சை போட்டுள்ளது என கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருந்து வருகிறது. மின்சாரம் வேண்டும் என கேட்கும் நிலையில் அனல் மின்நிலையம் செயல்பட நிலக்கரி கொண்டுவர சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் எதிர்ப்பது சரியல்ல.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: