விவசாயத்துக்கான மானிய தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

பள்ளிப்பட்டு,செப்.19:  நீடித்த மானாவரி விவசாயத்திற்கான கோடை மானியம் ரூ.500 பெற விவசாயிகள் விண்ணப்பம் வழங்க வேண்டும் என்று பள்ளிப்பட்டு வேளாண்மை உதவி இயக்குநர் முனியப்பன் கேட்டுக்கொண்டார்.பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பொதட்டூர்பேட்டை, வாணி விலாசபுரம்,நொச்சிலி, பாண்றவேடு, கோணசமுத்திரம், அத்திமாஞ்சேரி, கேசவராஜ்குப்பம், கொல்லாலகுப்பம், நெடுங்கல், பேட்டைகண்டிகை உட்பட பல்வேறு கிராமங்களில் 600 ஏக்கர் பரப்பளவு  மானாவாரி நிலத்தில் பயிர் செய்யப்படுகின்றது. சிறு தானியங்கள், பயிறுவகை, எண்ணை வித்து பயிர்கள் போன்றவற்றை பருவ மழையை நம்பி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று  வாணிவிலாசபுரம், பொதட்டூர்பேட்டை பகுதிகளில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி பயிர்களான கம்பு, ராகி, மணிலா வகை பயிர்களை வேளாண்மை உதவி இயக்குநர் முனியப்பன்  பார்வையிட்டு சிறந்த மகசூல் பெற ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், நீடித்த மானாவாரி திட்டத்தின் கீழ் கோடை உழவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு மானியமாக ரூ.500 வழங்கப்படுகின்றது. விவசாயிகள் மானியம் பெற சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தக நகலுடன் வேளாண்மைத் துறை அலுவலகத்தை அணுக வேண்டும் என்றார். உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன்,சம்பத்,சிவசங்கர் உடனிருந்தனர்.

Related Stories: