அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், தக்கலையில் நடந்தது

நாகர்கோவில், செப்.19: அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவிலிலும், மேற்கு மாவட்ட திமுக சார்பில் தக்கலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசின் ஊழல்களை கண்டித்தும், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக கோரியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவிலில்  கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். மாநில மீனவரணி செயலாளர் பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், ஆஸ்டின் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலை வர் ேஜாசப்ராஜ், துணை செயலாளர்கள் ஜெயராணி ஜோஸ், அர்ஜூனன், முத்துசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம், பொதுக்குழு உறுப்பினர்கள் பெஞ்சமின், அழகம்மாள்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் எப்எம் ராஜரத்தினம், குட்டிராஜன், தாமரைபாரதி, மதியழகன், சற்குருகண்ணன், நெடுஞ்ெசழியன், பாபு, லிவிங்ஸ்டன், ரமேஷ்குமார், நகர செயலாளர் வக்கீல் மகேஷ், அணிகளின் அமைப்பாளர்கள் சிவராஜ், தில்லைசெல்வம், ஜோசப்ராஜ், உதயகுமார், டாக்டர் வள்ளுவன், பன்னீர்செல்வம், சதாசிவன், கோபி, ஜெஸிந்தா, சுரேந்திரகுமார், செல்வன், தொமுச இளங்கோ, சிவன்பிள்ளை, பூதலிங்கம்பிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசியதாவது: தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக அரசின் ஊழல்கள் காரணமாக கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக வருமானவரித்துறையும், சிபிஐயும் தொடர்ச்சியாக சோதனைகளை நடத்தி வருகின்றன. அண்மையில் டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் சோதனை நடந்ததே தவிர அமைச்சர் மீதோ, டிஜிபி மீதோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் பதவி விலகவும் இல்லை. இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் இன்று ஊழல் மலிந்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையில் யார் அதிக கமிஷன் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தத்தை வழங்கும் நிலை உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய அரசாக இருந்தது. தற்போதுள்ள எடப்பாடி அரசு கமிஷனுக்காக திட்டங்களை அறிவிக்கும் அரசாக உள்ளது. தமிழக அரசு அறிவித்த ஸ்கூட்டருக்கு மானியம், வீடு கட்டியவர்களுக்கு மானியம் போன்றவை இதுவரை வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை போன்றவற்றை முறையாக வழங்காமல் ஏமாற்றுகின்றனர். ரேஷன் பொருட்கள் கூட மக்களுக்கு முறையாக வழங்காமல் கடைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து, செயல் திறனற்ற தமிழக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர உள்ளது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவார். இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்சியில் தொடர என்ன தகுதி இருக்கிறது?

தக்கலை: அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தக்கலையில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ  தலைமை வைத்தார். நகர திமுக செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்  அருளானந்த ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், மாவட்டத்  துணைச் செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், ஜாண் கிறிஸ்டோபர், அவைத் தலைவர் பப்புசன், பொதுக்குழு உறுப்பினர் கிறிஸ்டல் பிரம்மகுமாரி, மாநில சட்டத்துறை துணை அமைப்பாளர் தினேஷ்,  ஒன்றிய செயலாளர்கள் சிற்றார் ரவிச்சந்திரன்,  ராஜன், மனோன்மணி, ஜான்பிறைட், குழித்துறை நகர செயலாளர் ஆசை தம்பி, அணிகளின் நிர்வாகிகள்  ததேயு பிரேம்குமார், ரேவன்கில்,  முத்துக்குமரேஷ், வர்க்கீஸ், சம்சுதீன், குமார், திருவிதாங்கோடு  பேரூர் செயலாளர் ஷேக் முகம்மது, ஒன்றிய துணை செயலாளர் ஜுட்சேம், அலிகான், பைங்குளம் பேரூர் திமுக செயலாளர் அம்சி நடராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மனோ தங்கராஜ் எம்எல்ஏ பேசியதாவது: இபிஎஸ், ஓபிஎஸ்.ம் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக ஊழல் செய்து கொண்டிருப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.  ஊழல்கள் குறித்து  ஆளுநரிடமும். நீதிமன்றத்திடமும் முறையிடப்பட்டுள்ளது. முதல்வர் மீது ஏன் வழக்கு தொடரக்கூடாது என நீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. இதன் பிறகும் ஆட்சியில் தொடர என்ன தகுதி இந்த அரசுக்கு இருக்கிறது. உயர் பதவியில் உள்ளவர்கள் விசாரணை முடியும் வரை பதவி விலக சொல்வதற்குக் கூட திராணியற்ற அரசாக உள்ளது. குட்கா ஊழல் பூதாகரமாக கிளம்பியுள்ளது. சட்டமன்றத்திலும்,  வெளியிலும்,  நீதிமன்றத்திலும் திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த போதிலும் அதைப் பற்றிக் கடுகளவும் கண்டுகொள்ளாத அரசாக உள்ளது. இந்த ஆட்சி தொடர்ந்து இப்படியே நீடித்தால் அனைத்துத் துறைகளையும் நாசம் செய்து விடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: