காய்ந்து வரும் சம்பா பயிருக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு

திருவாரூர், செப்.18: திருவாரூர் அருகே காய்ந்து வரும் சம்பா பயிருக்கு  தண்ணீர் கேட்டு  மாராங்குடி கிராம விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையானது கடந்த ஜுன் மாதம் 19ம் தேதியும், 22ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட நீரானது அடுத்த ஒரு சில தினங்களில் கடைமடை பகுதிகளை சென்றடையும் என்று அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தெரிவித்த கருத்தினையடுத்து நடப்பாண்டில் சாகுபடி பணிகளை முன்கூட்டியே துவங்கலாம் என்று விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் இதற்கு மாறாக கொள்ளிடத்தில் அளவுக்கு அதிகமான நீர் திறக்கப்பட்டு சுமார் 150 டி.எம்.சி வரையில் வீணாக கடலில் கலக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக நெல் உற்பத்தியை மேற்கொண்டு வரும் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர்.இந்நிலையில் இதுவரையில்  எந்த ஒரு பாசன வாய்க்கால்களையும் ஆற்று நீர் சென்றடையாமல் இருந்து வருவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது. மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நாற்றுகளை விடுவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றுள்ள குறுவை சாகுபடிக்கும் கூட உரிய நீர் கிடைக்காத நிலையில் இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களுக்கு தற்போது போர்வெல்கள் மூலம் நீர் பாய்ச்சும் நிலை இருந்து வருகிறது. மேலும் நேரடி நெல் விதைப்பு நடைபெற்று அவைகளில் பெரும்பாலான நாற்றுகள் அரையடி உயரம் வரையில் முளைத்துள்ள நிலையில் அவைகளுக்கும் உரிய நீர் கிடைக்காததன் காரணமாக அந்த பயிர்கள் காய்ந்து வருவதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் ஆடு, மாடுகளை விட்டு மேய்க்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் அருகே மாராங்குடி கிராமத்தில் 170 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் காய்ந்து வருவதால் உடனடியாக அந்த பகுதியில் செல்லும் வாய்க்கால்களில் போதிய அளவில்  தண்ணீர் விடுமாறு  கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் நிர்மல்ராஜிடம் மனு அளித்தனர். முத்துப்பேட்டை செப்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில்  ஆண்டு தோறும் வினாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும்.

அதன்படி இன்று மாலை இந்து முன்னணி சார்பில் 26ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. முன்னாள் தாலுகா ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜப்பா தேவர்  தலைமை வகிக்கிறார். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசுகிறார்.சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், பாஜக மாநில பொதுச்செயலாளர், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறனர். ஊர்வலத்தில் உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

முன்னதாக மதியம் 2 மணிக்கு துவங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, பங்களா வாசல் வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வல பாதை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும்  40க்கும் மேற்பட்ட தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி.வரதராஜ், தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் எஸ்.பி.விக்ரமன், நாகை எஸ்பி விஜயகுமார், மற்றும் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இன்ஸ்பெக்டர், போலீசார் உட்பட திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு,போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று கடல் வழியாக தீவீரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரைப் பகுதிகள் மற்றும் அலையாத்திக்காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று ஊர்வல பாதையை  நேற்று திருச்சி சரக ஐஜி வரதராஜ், தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் எஸ்.பி.விக்ரமன், நாகை எஸ்பி விஜயகுமார்; ஆகியோர் நடந்தே சென்று பார்வையிட்டனர். மேலும் ஊர்வலம் துவங்கும் இடம் மற்றும் சிலைகள் கரைக்கும் பாமணி ஆற்றுக்கரை ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

Related Stories: