சாமியாருக்கு அடி உதை ஊரை விட்டு ஓட்டம் பிடித்தார்

ஒரத்தநாடு, செப். 18:  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு, கண்ணுக்குடி கிராமங்கள் உள்ளது. இந்த 2 கிராமங்களுக்கு நடுவில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் 2 கிராமங்களுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கண்ணுக்குடி சிவன் கோயிலில் கேரளாவை சேர்ந்த காசி மகாராஜா என்ற சாமியார் பூஜைகள் செய்து வந்தார். இதனால் இவர்  கோயிலிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 15ம் தேதி ஆம்பலாபட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், விநாயகர் சிலையை கண்ணுக்குடி சிவன் கோயிலில் உள்ள குளத்தில் கரைப்பதற்காக தூக்கி வந்தனர். அப்போது சிவன் குளத்தில் விநாயகர் சிலையை கரைக்க விடாமல் சாமியார் காசி மகாராஜா தடுத்தார். இதையடுத்து காசி மகாராஜாவை வாலிபர்கள் தாக்கினர். இதில் அவரது காரும்  அடித்து உடைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து ஆம்பலாப்பட்டு, கண்ணுக்குடி கிராம மக்களிடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சிவன் கோயிலில் இருந்து இரவோடு இரவாக சாமியார் காசி மகாராஜா தப்பி சென்றார். நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு பக்தர்கள் வந்தபோது சாமியார் காசி மகாராஜா காணவில்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories: