ஆற்றின் கரையோர பகுதியில் காவிரி உரிமை மீட்புக்குழு ஆய்வு

கும்பகோணம், செப். 18:  கும்பகோணம் பகுதியி–்ல் உள்ள ஆறுகளின் கரையோர பகுதிகளில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் கள ஆய்வு செய்தனர். காவிரி படுகையில் நீர் மேலாண்மை எப்படி இருக்கிறது என்பதை கள ஆய்வு செய்வதற்காக காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 5 பிரிவுகளாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி காவிரி உரிமை மீட்புக்குழுவினர், பொருளாளர் மணிமொழியன் மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுந்தர விமலநாதன் தலைமையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் கள ஆய்வை துவங்கினர்.

இதில் கல்லணை, இளங்காடு, திருக்காட்டுப்பள்ளி,  திருப்பூந்துருத்தி, கண்டியூர், திருவையாறு, பைரவன்கோயில், கணபதி அக்ரஹாரம், அலவந்திபுரம், நாககுடி, கும்பகோணம் ஆகிய இடங்களில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், வாய்க்கால்களை பார்வையிட்டு ஆங்காங்கே கூடியிருந்த விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். இதைதொடர்ந்து இன்று கும்பகோணத்தில் துவங்கி மயிலாடுதுறை, பூம்புகார் வரை கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து காவிரி உரிமை மீட்புகுழு பொருளாளர் மணிமொழியான் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் மேலாண்மை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இந்தாண்டு வந்த காவிரி வெள்ள நீர் வெளிப்படுத்திவிட்டது. காவிரி படுகை நீர் மேலாண்மையில் மாபெரும் மறுசீரமைப்பு திட்டங்கள்,  பணிகளை செயல்படுத்த வேண்டும். கதவணை, தடுப்பணை, படுக்கை அணைகள் தேவைப்படும் இடங்களை அறிந்து கொள்ளவும், தூர்வார வேண்டிய பகுதிகள், புதிதாக உருவாக்கப்பட வேண்டிய இணைப்பு கால்வாய்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்துள்ளோம். பல இடங்களில் ஆறுகளில் மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஆறுகள் தாழ்வான பகுதிக்கு சென்றுள்ளது.

இதனால் தண்ணீர் இல்லாமல் வயல்கள் காய்ந்து வருகிறது. நாங்கள் பார்வையிட்ட பகுதி முழுவதும் போர்வெல் மூலம் தான் சாகுபடி பணிகள் நடச்து வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக போர்வெல் அமைக்க முன்னுரிமை அளிக்கவும், ஆறு, குளங்களிலிருந்து 200 மீட்டருக்குள் போர்வெல் அமைக்க முடியாது என்ற விதிகளை திருத்த வேண்டும்.  ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: