ஆலங்குடி அருகே நம்புகுழியில் நெல் நாற்று வேர் முழுகல் குறித்த செயல்முறை விளக்க பயிற்சி

ஆலங்குடி, செப். 18: ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட நம்புகுழி கிராமத்தில் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு நெல் நாற்று வேர் முழுகல் குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர். மாணவிகள் குழுவின் செயலாளர் கீதாஞ்சலி விளக்கப் பயிற்சியை தொடங்கி வைத்து விவசாயிகளிடம் பேசுகையில், நெல்நாற்று வேர் முழுகலுக்கு உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம். நெல் நாற்றுக்கு உயிரி உரமான அசோஸ்பைரில்லம் மிகவும் பொருத்தமானது. இந்த உயிரி உரமானது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி, பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.

இதனை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் அளவைக் குறைக்கலாம் என்றார். இதனைத் தொடர்ந்து உயிரி உரத்தைப் பயன்படுத்தி வேர் முழுகல் செய்யப்பட்ட நெல்நாற்றுகளை மாணவிகள் வயலில் நடவு செய்தனர். இதில் தீபிகா, கீதாஞ்சலி, கேந்திரியா, கோகிலா, இமையா, காயத்ரி மற்றும் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: