வடகிழக்கு பருவமழை காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்

பெரம்பலூர்,செப்.18: வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய் வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்துப் பேசியதாவது :  வரும் அக் டோபர் 1ம்தேதிமுதல் டிசம்பர் மாதம் 31ம்தேதிவரையிலான வடகிழக்குப் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு, அனைத்துத்துறைஅலுவலர்களும், ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும்.  அத னடிப்படையில் காவல்துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல்ஆய்வாளர் நிலையிலான குழுவினை அமைக்கவும், தீயணைப்பு, மீட்புப் பணித் துறைமூலம் மாவட்ட மற்றும் வட்டஅளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகு திகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழைநீர் தடையின்றிசெல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற மாற்றுவழிகளை ஏற்பாடு செய்து, மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  எனவே அனைத்துத்துறை அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்ற வேண்டும். பொதுமக்கள் மழைவெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார்தெரிவிப்பதற்கும் 1077மற்றும் 18004254556என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார்களைத்தெரிவிக்கலாம் என்றார்.

Related Stories: