போக்குவரத்து பாதிப்பு கீழ்மாத்தூர் கிராமத்தில் சூறாவளி காற்றில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி

செம்பனார்கோவில்,செப்.18: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த கீழ்மாத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் இரவு வானம் மேகமூட்டத்துடன் காற்று அடிக்க ஆரம்பித்துள்ளது. திடீரென்று இரவு 8 மணியளவில் லேசான மழையோடு சூறாவளி காற்று பலமாக வீசியது. இதில் கீழ்மாத்தூர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததால் 240க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து ஒயர்கள் வீடுகளின் மீதும், சாலைகளிலும் விழுந்தது. 150க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள், ஓடுகள் பறந்து சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பூம்புகார் எம்.எல்.ஏ.பவுன்ராஜ், தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.  முறிந்த மரங்களை அகற்றுவதற்கும், மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கீழ்மாத்தூர் அடுத்துள்ள வள்ளுவபுள்ளி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் வீட்டின்மேல் மரம் விழுந்தது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், பூம்புகார் எம்.எல்.ஏ., பவுன்ராஜ் ஆகியோர் நிவாரண தொகையாக ரூ.5000மும், அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

Related Stories: