கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகட்ட கடன் வழங்க வேண்டும்

வேதாரண்யம்,செப்.18: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கடன் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கில் தமிழக கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம் மற்றும் தகுதி பெற்ற தொழிலாளர்களுக்கு தொழிற் சான்று வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட செயலாளர் துரையரசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில தலைவர் துரைராஜ், மாநில பொருளாளர் ராமநாதன், மாநில செயலாளர் கருப்பையா, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், வேதை ஒன்றிய தலைவர் நடராஜன், செயலாளர் வீரமணி, தலைஞாயிறு ஒன்றிய தலைவர் மதியழகன், செயலாளர் சக்கவர்த்தி, ஒன்றிய பொருளாளர் ஜெயபால், தலைஞாயிறு அதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மாசி, பாட்டாளி மக்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்லூரியால் நிர்ணயிக்கப்பட்ட முழுத்தொகையும் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கடன் வழங்க வேண்டும். 60 வயதை கடந்த அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் மாத உதவித்தொகையாக ரூ. 5000 வழங்க வேண்டும், மழை காலங்களில் தொழிலாளர்களுக்கு புதுவை அரசு வழங்குவதை போல் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை தலைவர் வேலாயுதம் நன்றி கூறினார்.

Related Stories: