நாகையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 240 மனுக்கள் குவிந்தன

நாகை.செப்.18: நாகை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை சம்பந்தமாக 16 மனுக்களும்,  மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட 240 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான விபத்து நிவாரண தொகையும், உழவர் பாதுகாப்புத்திட்டம சார்பில் ஒரு பயனாளிகளுக்கு ரூ.1,02,500  மதிப்பிலான காசேகாலையும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கைக்கால் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தனித்துணை கலெக்டர் வேலுமணி, மாவட்ட மாற்றத்திறனாளி அலுவலர் விக்டர்மரியஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: