குறுவட்ட போட்டியில் சீர்காழி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் சாதனை

சீர்காழி,செப்.18: சீர்காழி குறுவட்ட அளவில் குழு மற்றும் தடகளபோட்டி விவேகானந்தா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  இதில் தாலுகா அளவில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த  மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவன் சித்தார்த் 100மீ, 200மீ ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் 3ம் இடமும், 8ம் வகுப்பு மாணவன் திரோஷன் 400 மீட்டரில் 2ம் இடமும், முகம்மது மதியாஸ் குண்டு எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில் 2ம் இடமும், மாணவன் பரத் உயரம் தாண்டுதலில் 2ம் இடமும், ஹரிபிரசாத் வட்டு எறிதலில் 3ம் இடமும், 400 மீ போட்டியில் முதலிடமும் பெற்றனர். அதேபோல், மேலர்பிரிவில் மாணவன் கிரிவீஷ் 100, 200 மீட்டரில் முதலிடமும், கதிரவன் 200, 400மீட்டரில் முதலிடமும், வேகாஷ் 400 மீட்டரில் மூன்றாமிடமும், ரமீன்தரன் குண்டு எறிதலில் 3ம் இடமும், கோகுல் நீளம் தாண்டுதலில் 3ம் இடம், ஈட்டி எறிதலில் மாணவன் ஆகாஷ் 3ம் இடமும், 400 மீட்டர் போட்டியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தனர்.

 மேன்மேலர் பிரிவில் முகமது பீர்கான் 100 மீட்டரில் 2ம் இடமும், ஈட்டி எறிதலில் முதலிடமும், உயரம் தாண்டுதலில் முதலிடமும், மாணவி உதயா 200, 400 மீட்டரில் 2ம் இடமும், சூர்யா வட்டு எறிதலில் 2ம் இடமும், மாணவன் சுனீல் 800, 1500 மீட்டரில் முதலிடம், ஆகாஷ் 2ம்  இடம், சீனிவாசன் மும்முனை தாண்டுதலில் 3ம் இடம், 400 மீட்டரில் முதலிடமும் பெற்றனர். குழுபோட்டியில் ஆண்கள் பிரிவில் கால்பந்து வளைகோல் பந்து போட்டியில் முதலிடமும், இறகுபந்து போட்டியில் முதலிடமும், பெண்கள் வளைகோல் ஆட்டத்தில் மேலர், மேன்மேலர் பிரிவில் முதலிடமும் பெற்று அதிக புள்ளிகள் பெற்று இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.  வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், நெடுமாறன், சசிகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், அனிதா, குட்சமாரிட்டன் பப்ளிக் ஸ்கூல் இயக்குனர் பிரவீன்வசந்த்ஜெபேஷ், அனுஷாமேரி, மயிலாடுதுறை குட்சமாரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் அலெக்ஸ், விவேகானந்தா பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா, மேலாளர் சுதாகர், நிர்வாக அலுவலர் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்  பாராட்டினர்.

Related Stories: