நெரூர் தென்பாகம் மக்கள் முடிவு குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக்க வேண்டும்

கரூர், செப்.18: குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கரூர் மாவட்டக் கிளைக் கூட்டம் சங்க தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. முத்துசாமி, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் கருப்பன், பொதுசெயலாளர் சிவசங்கரன், செயல்தலைவர் வீரமணி, சதாசிவம், ஆனந்தன், சந்திராபாய், பேசினர், நாகேந்திர கிருஷ்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில், மத்திய அரசு உயர்த்தியுள்ள 2 சதவீத அகவிலைப்படியை ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தால் ஓய்வூதியர்களுக்கு இழப்பு ஏற்படுகின்ற நிலையை தவிர்க்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்படி ரூ.350 பிடிப்பதை ரூ.200ஆக குறைக்க வேண்டும். ஓய்வூதியர் இறப்பிற்கு பின் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: