கீழக்கரை அருகே கவுசானல் கல்லூரியில் ஐம்பெரும் விழா

கீழக்கரை, செப்.18: கீழக்கரை அருகே பெரியபட்டிணம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் செப்.6 முதல் 9ம் தேதி வரை உணவு திருவிழா, இளைஞர் திருவிழா, கலையரங்க திறப்பு விழா, ஆசிரியர் தினவிழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். புனித ஜோசப் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம், புனித ஜோசப் விடுதியின் இயக்குனர் கிறிஸ்டோபர், மரியன்னை விடுதியின் இயக்குநர் மைக்கில் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முதல்வர் ஹேமலதா

குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் மகாலெட்சுமி வரவேற்றார். புதிதாக கட்டப்பட்டுள்ள ஆஞ்சாலோ கலை அரங்கினை இருதய சபையின் அதிபர் வேளாங்கன்னி திறந்து வைத்தார். இளைஞர் தினத்திற்காக மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினரான திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் பேசினார்.விழாக்களில் இருதய சபையின் கல்வி பணியணைக் குழு பொதுச்செயலாளர் கஸ்பர், பொது நிதியர் கிறிஸ்தாமஸ், முத்துப்பேட்டை பங்கு தந்தை அந்தோனிராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஹரிபிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: