குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுறுத்தல்

சாயல்குடி, செப் 18: கடலாடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்  நடந்தது. கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பஞ்சாயத்து செயலர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல அதிகாரி உதயசங்கர் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கழிவுநீர், குப்பைகளை தேங்க விடாமல் தினந்தோறும் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், டெங்கு, மலேரியா காய்ச்சல் வரவிடாமல் சுகாதார துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தனிநபர் கழிவறைகள் மற்றும் பிரதமர் வீடுகள், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை விரைவாக கட்டி முடிக்க வேண்டும்.

ஊராட்சிகளில் நடந்து வரும் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். கிராமங்களில் குடிநீர் பிரச்னையை உடன் தீர்க்க வேண்டும். வீட்டு வசதி, கடை வாடகை பாக்கி ஆகியவற்றை வசூல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: