மேலூர் அருகே ஓடும்போதே தீப்பிடித்து எரிந்த அரசு டவுன் பஸ்

மேலூர், செப்.18: மேலூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் தீப்பற்றி எரிய அலறி அடித்தபடி பயணிகள் இறங்கினர்.

மேலூரில் இருந்து மதுரையை நோக்கி நேற்றிரவு 8 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. நரசிங்கம்பட்டி அருகில் பஸ் சென்றபோது திடீரென முன்பக்க என்ஜினில் இருந்து புகை வந்தது. அதனை தொடர்ந்து தீப்பற்றியது. இதனால் உஷாரான டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் குடங்களில் தண்ணீரை கொண்டு வந்து தீப்பற்றிய இடத்தில் ஊற்றி அணைத்தனர். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.பயணிகள் கூறுகையில், ‘‘மேலூர் அரசு பணிமனையில் இருந்து தினசரி பயணிகளுக்காக இயக்கப்படும் டவுன் பஸ்கள் பெரும்பாலும் ஓட்டை உடைசலாகவே உள்ளது. டிரைவர்கள் உயிர் பயத்துடன் தான் பஸ்களை இயக்குகின்றனர். மேலூரில் எப்சி எடுப்பதற்கு இங்குள்ள அதிகாரி கடுமை காட்டுவதால், மேலூரில் உள்ள டவுன் பஸ்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிக்கு கொண்டு சென்று எப்சி எடுக்கப்படுவதாக புகார்கள் உள்ளது. புதிய பஸ்களை மேலூர் பகுதியில் இயக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: